Theme Check

அதிர்ச்சி! சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு!!
X

சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவர் சாப்பிட்ட சிக்கன் தான் உயிரிழப்புக்கு காரணமா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாசர்பாடியை சேர்ந்த ரஞ்சித்( 22) என்ற இளைஞர் கேமராமேனாக பணியாற்றி வந்தார். அவர் பெரம்பூர் பிபி சாலையில் உள்ள நண்பர் கிரிதரனுடைய மருந்தகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து பிரபல தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டனர்.

அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்ற நிலையில், ரஞ்சித் வீட்டிற்குச் சென்று இரவு 10 மணியளவில் இடது பக்கம் வலிக்கிறது என்று அண்ணனிடம் தெரிவித்தார். இதனையடுத்து அவர் வாந்தி எடுத்ததால், அவரது அண்ணன் ரஞ்சித்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

chicken

செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென மயக்கம் அடைந்தார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சிக்கன் சாப்பிட்ட நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர்.

இதனால் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it