Theme Check

அதிர்ச்சி !! 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை

அதிர்ச்சி !! 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை

அதிர்ச்சி !! 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை
X

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியா முழுவதும் குறிப்பிட்ட 10 மாநிலங்களில் பாதிப்பு அசுர வேகம் எடுத்துள்ளது.அந்த வகையில் , கர்நாடகாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால் ஏப்ரல் 27 இரவு 9 மணி முதல் மே10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தினார் முதல்வர் எடியூரப்பா.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பால் அனைவருக்கும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிய அளவிலான பாதிப்புகள், அறிகுறிகள் இன்றி காணப்படுவோர் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களை கண்காணிக்க எந்நேரமும் மொபைல் போன்களை ஆன் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா நோயாளிகள் பலர் போனை ஸ்விட்ச் ஆப் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை விசாரித்த கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 நோயாளிகள் மாயமாகியுள்ளனர். கொரோனா நோயாளிகள் தங்களது மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கின்றனர்.போலீசார் உதவியுடன் மாயமான நோயாளிகளை தேடி வருகிறோம் என கூறினார்.

நோயாளிகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்தால் 90 சதவீத நோயாளிகள் குணமடைந்து விடலாம் எனவும் கூறினார்.

Tags:
Next Story
Share it