அதிர்ச்சி !! ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய சூரரைப் போற்று..!

அதிர்ச்சி !! ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய சூரரைப் போற்று..!

அதிர்ச்சி !! ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய சூரரைப் போற்று..!
X

93-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறாமல் போனது ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

சினிமாத்துறைக்கு கிடைக்கும் மணிமகுடமாக கருதப்படுகிறது ஆஸ்கர் விருது. இதை பெறுவதற்கு ஆண்டாண்டு காலமாக தமிழ் படங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதன் அருகில் கூட நெருங்க முடியவில்லை. இந்தியர்களுக்கு கிடைக்கும் இந்த விருது, இந்தியப் படங்களுக்கு கிடைப்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்ட போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருது வழங்கும் நடுவர் குழுவும் 366 படங்களில் ஒன்றாக சூரரைப் போற்று திரைப்படத்தை தேர்வு செய்தனர்.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படம் போட்டியிட்டு வந்தது. சிறந்த நடிகருக்கான போட்டியில் நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகைக்கான போட்டியில் அபர்ணா பாலமுரளி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனால் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவே சூரரைப் போற்று படத்தை உற்றுநோக்கி வந்தது.

இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலில் நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் அவருடைய கணவர் நிக் ஜோனஸ் இருவரும் தோன்றி இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குரிய இறுதிப் பட்டியலில் இடம்பெறும் படங்கள் மற்றும் கலைஞர்களை அறிவித்தனர். மொத்தமுள்ள 24 பிரிவுகளில் ஒன்றில் கூட சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்னதாக சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் மலையாளத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல் சுற்றிலேயே அந்த படம் வெளியேறியது. ஆஸ்கர் பந்தயத்தில் படிப்படியாக முன்னேறி வந்த சூரரைப் போற்றூ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறாமல் போனது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள் பலர், ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்தியப் படங்கள் இடம்பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை. இனி வரும் காலங்களில் இந்தியாவில் தயாராகும் படங்களும், நடிகர்களும் நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags:
Next Story
Share it