அதிர்ச்சி ..!! புதுவையில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு..!!
அதிர்ச்சி ..!! புதுவையில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு..!!

புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியாக 20-வது வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை தாங்கினார்.
அவர் கூட்டத்தில் பேசும்போது, புதுவையில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்.
குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளை தாக்கினால் எதிர்கொள்வதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கெனவே செய்யப்பட்டிருப்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது.
கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் 3-வது அலை தாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும். தடுப்பூசியால் புதுச்சேரி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக தடுப்பூசி செலுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
Chaired 20th State Covid Task Force review meeting at Raj Nivas #Puducherry.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 15, 2021
கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா 3வது அலை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. pic.twitter.com/iW6suZ2SAG

