Theme Check

அதிர்ச்சி!! அமெரிக்க அப்பார்ட்மெண்டில் இந்திய கர்ப்பிணிப் பெண்ணும் கணவரும் மரணம்! பச்சிளம் குழந்தை பரிதவிப்பு!!

அதிர்ச்சி!! அமெரிக்க அப்பார்ட்மெண்டில் இந்திய கர்ப்பிணிப் பெண்ணும் கணவரும் மரணம்! பச்சிளம் குழந்தை பரிதவிப்பு!!

அதிர்ச்சி!! அமெரிக்க அப்பார்ட்மெண்டில் இந்திய கர்ப்பிணிப் பெண்ணும் கணவரும் மரணம்! பச்சிளம் குழந்தை பரிதவிப்பு!!
X

மஹாராஷ்ட்ராவின் பீட் பகுதியைச் சார்ந்த 32 வயது பாலாஜி பரத் ருத்ராவரும் அவருடைய மனைவி 30 வயது ஆரத்தி பாலாஜி ருத்ராவரும் 2014ம் ஆண்டு திருமணமானவர்கள். 2015ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை இருக்கிறது. ஆரத்தி மீண்டும் கர்ப்பமடைந்திருந்தார்.

சம்பவத்தன்று மாலை 5:40 மணி அளவில் பாலாஜி - ஆரத்தியின் 4வயது பெண்குழந்தை வீட்டின் பால்கனியில் தனியா நின்று அழுது கொண்டிருந்ததை அக்கம்பக்கம் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். குழந்தை அழுவதைக் கேட்டும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லையே என்று கவலை அடைந்தவர்கள் அவசர உதவி எண் 911 க்கு தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்ற போது பாலாஜி, ஆரத்தி இருவரும் மரணம் அடைந்த நிலையில் கிடந்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஆரத்தியின் வயிற்றில் கத்தியால் பாலாஜி குத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதை எதிர்த்துப் போராடியுள்ளார் ஆரத்தி என்றும் முதல் தகவல்கள் அடிப்படையில் கூறப்படுகிறது. இருவருக்குமே கத்திக்குத்துக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆரத்தியை கொன்ற பிறகு தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டார்களா என்று தெரியவில்லை. அவர்களுடைய குழந்தை, இருவருக்கும் தெரிந்த நண்பர்கள் வீட்டில் தற்போது உள்ளது.

மனைவியின் கர்ப்பம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றாரா பாலாஜி என்று தெரியவில்லை. 4 வயது குழந்தையை இந்தியாவில் உள்ள குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுங்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சரத்பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் எம்.பியுமான சுப்ரியா சுலே.

கை நிறையச் சம்பளம், வெளிநாட்டு வாழ்க்கை என ஐடி வேலைக்காக அமெரிக்கா வந்த இடத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை நாடாமல் இத்தகைய முடிவை நோக்கிச் செல்வது, உடன் இருக்கும் நண்பர்களுக்கும் மீளாத் துயரமாகும். 30களில் வாழ்வின் வசந்ததை அனுபவிக்க வேண்டிய தம்பதிகள், பச்சிளம் குழந்தையை பரிதவிக்க விட்டு இத்தகைய முடிவை நோக்கிச் சென்றது மிகப்பெரிய சமூக துரோகமாகும்.

எந்தத் தவறும் செய்யாத, பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் குழந்தை விகா ருத்ராவரின் எதிர்காலத்திற்காக கோ ஃபண்ட் மூலம் நிதி திரட்டப்படுகிறது. இது வரையிலும் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு ஒரு அறக்கட்டளை நிறுவ பாலாஜி - ஆதித்தியின் நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். நிதியுதவி செய்ய விரும்புகிறவர்கள் இந்த https://www.gofundme.com/f/contribute-to-vihas-future இணைப்பில் நன்கொடையாக செலுத்தலாம்.

newstm.in

Tags:
Next Story
Share it