Theme Check

அதிர்ச்சி..!! பெண் மருத்துவரை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மைனர் சிறுவர்கள்..!!

அதிர்ச்சி..!! பெண் மருத்துவரை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மைனர் சிறுவர்கள்..!!

அதிர்ச்சி..!! பெண் மருத்துவரை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மைனர் சிறுவர்கள்..!!
X

வேலூர் மாவட்டம் காட்பாடி கிரிவலம் சாலையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் 2 நாட்களுக்கு முன்பு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து இரவு 12.30மணிக்கு மருத்துவர் ஆட்டோக்காக தியேட்டர் முன்பு காத்திருந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஷேர் ஆட்டோ என்று ஏமாற்றி மருத்துவரை ஆட்டோவில் ஏற்றி சென்றதாகவும் தெரிகிறது.

காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.
அதுவரை அமைதியாக இருந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டத் தொடங்கினர். பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர்‌. மேலும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் மருத்துவர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை.

இதுகுறித்து பெண் மருத்துவர் போலீசில் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், சத்துவாச்சாரியில் நேற்று ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டனர். அதில் சிலர் டிப்டாப் உடை அணிந்திருந்தனர். அவர்களை சத்துவாச்சாரி போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண் மருத்துவரிடம் பறித்த 40,000 ரூபாய் பணத்தில் புதிய ஆடைகள் வாங்கி அவர்கள் உல்லாசமாக செலவு செய்து வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் விஷயம் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மூவர் 18 வயதுக்குக் வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாகியுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story
Share it