Theme Check

அதிர்ச்சி !! கொலை வழக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் ?

அதிர்ச்சி !! கொலை வழக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் ?

அதிர்ச்சி !! கொலை வழக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் ?
X

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் டெல்லி போலீஸார் லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளனர்.

கடந்த வாரம் செவ்வாய்கிழமை மல்யுத்த வீரர் சாகர் தான்கட்டை அவரின் வீட்டிலிருந்து மல்யுத்த வீரர் சுஷில் குமார், அவரின் நண்பர்கள் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து சாகர் தன்கட்டைக் கடுமையாகத் தாக்கிவிட்டு சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலிஸிடம் சாகர் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர்.

தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சுஷில்குமார் கூறிவந்தாலும் அவர் ஏன் தலைமறைவானார் என்பது சந்தேகங்களை கிளப்ப அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. சுஷில் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it