Theme Check

மீண்டும் அதிர்ச்சி! பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை!!

மீண்டும் அதிர்ச்சி! பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை!!

மீண்டும் அதிர்ச்சி! பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை!!
X

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டன்று வால்பாறை பகுதி மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடமாட்டி மலைவாழ் மக்கள் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து அங்கு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை கடத்திச் சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் கிராமத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து மற்றும் கண்களை கட்டி சிறுமியின் வீட்டிற்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

பின்பு மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் பழங்குடியின தன்னார்வ அமைப்புகளுக்கு தகவல் கொடுத்தனர்.

Rape Girl

இந்த தகவலை வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டுமெனவும் புகார் மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல், கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

newstm.in

Next Story
Share it