Theme Check

அதிர்ச்சி.. தமிழகத்தில் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி..!

அதிர்ச்சி.. தமிழகத்தில் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி..!

அதிர்ச்சி.. தமிழகத்தில் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி..!
X

புவனகிரி, பேராவூரணி, திருவையாறு தொகுதி எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஷ்டபுரத்தைச் சேர்ந்தவர் அருண்மொழிதேவன் (53). புவனகிரி தொகுதி எம்எல்ஏவான இவர், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலராகவும் உள்ளார். இவரது மனைவி பொற்செல்வி, மூத்த மகன் அஜய் (22), இளைய மகன் சஞ்சய் (19).

இந்நிலையில், அருண்மொழிதேவன், அவரது மனைவி பொற்செல்வி, மூத்த மகன் அஜய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அதே போல், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ அசோக் குமார் (64) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இதை அடுத்து, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story
Share it