Theme Check

அதிர்ச்சி.. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு !!

அதிர்ச்சி.. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு !!

அதிர்ச்சி.. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு !!
X

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் அதன் பிடியில் சிக்கியுள்ளன. மத்திய அரசு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை விரைவுப்படுத்தி வருகிறது. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் அமைச்சர் ஒருவர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவுமான மேவலால் சவுத்ரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது முதல் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 68.

பீகாரில் உள்ள தாராபூர் தொகுதியின் எம்.எல்.ஏ அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பீகார் மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பீகாரில் மொத்தமாக 3,24,117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் 44700 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிறு அன்று மட்டும் புதிதாக 8690 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


newstm.in


Tags:
Next Story
Share it