Theme Check

அதிர்ச்சி.. காணாமல் போன பிரபல நடிகை.. சாக்குமூட்டையில் சடலமாக மீட்பு..!

அதிர்ச்சி.. காணாமல் போன பிரபல நடிகை.. சாக்குமூட்டையில் சடலமாக மீட்பு..!

அதிர்ச்சி.. காணாமல் போன பிரபல நடிகை.. சாக்குமூட்டையில் சடலமாக மீட்பு..!
X

வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு (45). இவர், கடந்த 1998-ம் ஆண்டு முதல் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதோடு, பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ரைமா காணாமல் போனதால், அவரது உறவினர்கள் கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Actress Raima Islam Shimu's husband Shakhawat Ali Nobel confesses to  murdering wife | Bengali Movie News - Times of India
இதையடுத்து, ஜனவரி 17-ம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சாக்கு மூட்டையில் இருந்த 45 வயதுடைய பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

பின்னர், அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக டாக்காவில் உள்ள சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நங்கு நடந்த பிரேத பரிசோதனையில், அது ரைமாவின் உடல் தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து ரைமா இஸ்லாம் ஷிமுவுக்கு என்ன நடந்தது..? அவரை யார் கொலை செய்து உடலை அப்புறப்படுத்தியது என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நடிகை ரைமா கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it