Theme Check

அதிர்ச்சி.. போதையில் 6 வயது மகளை உயிருடன் கொளுத்திய தந்தை !

அதிர்ச்சி.. போதையில் 6 வயது மகளை உயிருடன் கொளுத்திய தந்தை !

அதிர்ச்சி.. போதையில் 6 வயது மகளை உயிருடன் கொளுத்திய தந்தை !
X

உத்தரபிரதேசத்தில் ராஜபூத் கிராமத்தைச் சேர்ந்த ஜோகேந்திரா என்கிற பாப்லு என்ற நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் ஆவார்.

அடிக்கடி மது அருந்தி போதையில் வீட்டிற்கு வரும் ஜோகேந்திரா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போதையில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அனைவரும் அவரை கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகேந்திரா தனது ஆறு வயது மகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனை கண்ட குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து, கடுமையான தீக்காயங்களுடன் இருந்த அந்த சிறுமியை மீட்டனர். பின்னர், உடனடியாக சிகிச்சைக்காக சம்பல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடி போதையில் மகளை தீவைத்து கொள்ள முயன்ற ஜோகேந்திராவை கைது செயதனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியின் முகம், கழுத்து மற்றும் இரு கைகளிலும் 20% தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சிறுமி மொராதாபாத்தில் உள்ள ஒரு உயர்வசதிகொண்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it