மாமனாரே மருமகனை தலையை சீவியெடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரண்! வெளியான அதிர்ச்சி காரணம்!
மாமனாரே மருமகனை தலையை சீவியெடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரண்! வெளியான அதிர்ச்சி காரணம்!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட மருமகனை மாமனாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூர்யநாராயணா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு லட்சனா சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்துவிட்டார். இந்நிலையில் சூர்யநாராயணா இறந்துபோன தன்னுடைய மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அவரது மாமனாரிடம் விருப்பம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், இளைய மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாது என கூறிவிட்டார்.

ஆனாலும் மருமகன் சூர்யநாராயணா விடாமல் தொல்லை கொடுக்கவே அவரது மாமனார் கடும் ஆத்திரத்துக்கு உள்ளானார். அரிவாளால் மருமகனின் தலையை சீவிய அவர், தலையுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். பிறகு போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Newstm.in

