Theme Check

அதிர்ச்சி.. முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் கொரோனா தொற்றால் உயிரிழப்பு !!

அதிர்ச்சி.. முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் கொரோனா தொற்றால் உயிரிழப்பு !!

அதிர்ச்சி.. முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் கொரோனா தொற்றால் உயிரிழப்பு !!
X

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் பகாடியா கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்று சற்று குறைந்துவந்தாலும் உயிரிழப்பு விகிதம் கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது. கொரோனாவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் உயிரிழந்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மத்திய அமைச்சர்களும் சிலர் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதித்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான ஜெகன்னாத் பகாடியா கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

ஜெகன்னாத் பகாடியா கடந்த 1980 மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராக பதவி வகித்துதார். பின்னர் அவர் ஹரியானா மற்றும பீகார் மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். ஜெகன்னாத் பகாடியா மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைலவர்கள் உள்பட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it