Theme Check

அதிர்ச்சி.. நகைக்கடை சுவரில் துளை.. 2 கிலோ நகைகள் கொள்ளை..!

அதிர்ச்சி.. நகைக்கடை சுவரில் துளை.. 2 கிலோ நகைகள் கொள்ளை..!

அதிர்ச்சி.. நகைக்கடை சுவரில் துளை.. 2 கிலோ நகைகள் கொள்ளை..!
X

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனி சந்திரா மெயின் ரோட்டில் ஸ்ரீராகவேந்திரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு உரிமையாளரும், அங்கு வேலை செய்து வரும் ஊழியர்களும் வீட்டிற்கு சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அந்த நகைக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நகைக்கடையின் சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்தனர்.

பின்னர், நகைக்கடையில் இருந்த கண்ணாடி பெட்டிகளை திறந்த மர்ம நபர்கள் அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகளையும், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி மக்கள் நகைக்கடையின் சுவரில் துளையிடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த உரிமையாளர், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஹெண்ணூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த போலீசார், சம்பவம் நடந்த நகைக்கடையை பார்வையிட்டனர். மேலும் நகைக்கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், நகைக்கடையில் இருந்து மர்ம நபர்கள் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story
Share it