Theme Check

இந்தியாவில் அதிர்ச்சி.. ஆயிரத்தை நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு.. ஒரே நாளில் 169 பேர் பாதிப்பு

இந்தியாவில் அதிர்ச்சி.. ஆயிரத்தை நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு.. ஒரே நாளில் 169 பேர் பாதிப்பு

இந்தியாவில் அதிர்ச்சி.. ஆயிரத்தை நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு.. ஒரே நாளில் 169 பேர் பாதிப்பு
X

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 781 பேர் பாதிக்கபட்டிருந்தனர்.

நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 252 பேரும், டெல்லியில் 238, குஜராத்தில் 97, கேரளா 65, தெலுங்கானாவில் 62 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்தது.

f

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நாளில் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதியானது. இதனிடையே ஒமைக்ரான் பாதித்தவர்களில், இதுவரை 250க்கு மேலானோர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it