தமிழகத்தில் அதிர்ச்சி.. பள்ளி மாணவிகள் 511 பேருக்கு திருமணம்..!
தமிழகத்தில் அதிர்ச்சி.. பள்ளி மாணவிகள் 511 பேருக்கு திருமணம்..!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏராளமான மாணவ - மாணவியர் படிப்பை தொடராமல் இருந்துள்ளனர்.
இது குறித்து மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மூலம் இடைநிற்றல் மாணவ, மாணவியரை கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல மாணவர்கள் வேலைகளுக்கு செல்வதை கண்டறிந்து அந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். மாணவிகளை பொறுத்தவரை, 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் நடத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
அதில், 13 வயது நிரம்பிய 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும், 9-ம் வகுப்பு மாணவிகள் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவிகள் 45 பேருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதேபோல், 11-ம் வகுப்பில் 417 மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பில் 2 மாணவிகளுக்கும் என மொத்தம் 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையால் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

