Theme Check

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை திடீர் உயர்வு..!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை திடீர் உயர்வு..!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை திடீர் உயர்வு..!!
X

தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி முக்கியமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதனால் நாள்தோறும் 5 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தியாகின்றது. மொத்த உற்பத்தியில் கேரள, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழ்நாட்டில் பிறப்பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

egg

இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மண்டல தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளார்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

boiler

இதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மேலும் 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் முட்டை விலை தொடர்ந்து உயர்நது வருவது குறிப்பிட்டத்தக்கது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 131-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Next Story
Share it