Theme Check

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. தீவிர பிரச்சாரத்தில் இருந்த திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்..!

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. தீவிர பிரச்சாரத்தில் இருந்த திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்..!

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. தீவிர பிரச்சாரத்தில் இருந்த திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்..!
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டை பேரூராட்சியில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்து வந்த திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டை பேரூராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அதே பகுதி நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார். இவர், கடந்த 2 வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று (17ம் தேதி) மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால், இன்று காலையில் இருந்தே அனுசியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள், உடனடியாக அருகில் இருந்த மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தனர். ஆனால், அனுசியா இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். அனுசியாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டு திமுக வேட்பாளர் எம்.ஐயப்பன், விருதுநகர் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா, அம்மாபேட்டை பேரூராட்சியின் 2-வது வார்டு திமுக வேட்பாளர் சித்து ரெட்டி, அய்யம்பேட்டை திமுக வேட்பாளர் அனுசியா என, திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
Share it