Theme Check

அதிர்ச்சி ரிப்போர்ட்! 71% இந்தியர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைப்பதில்லை!!

அதிர்ச்சி ரிப்போர்ட்! 71% இந்தியர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைப்பதில்லை!!

அதிர்ச்சி ரிப்போர்ட்! 71% இந்தியர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைப்பதில்லை!!
X

இந்தியர்களில் 71% பேர் ஆரோக்கிய உணவு வாங்க முடியாத சூழலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்கள் 2,600 கலோரிகளும் பெண்கள் 2,000 கலோரிகள் உள்ள உணவையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வழிநடத்த முடியும்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSI) மற்றும் டவுன் டு எர்த் பத்திரிகை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, 71% இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உலக சராசரி 42 சதவீதம் ஆகும்.

ஒரு சராசரி இந்தியரின் உணவில் பொதுவாக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் போதுமான அளவுகளில் இல்லை. மீன், பால் மற்றும் இறைச்சியின் நுகர்வு ஓரளவு தேவையான அளவு உள்ளது.

food poverty 1

மேலும் தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்படும் நோய்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதோடு சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை பற்றியும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உணவு முறைகள் ஆரோக்கியமாக இல்லை. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உயர்ந்துகொண்டே வருகிறது என்று அறிக்கை கூறுகிறது.

newstm.in

Next Story
Share it