Theme Check

அதிர்ச்சி ரிப்போர்ட்! தென்னிந்தியாவில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றங்கள்!!

அதிர்ச்சி ரிப்போர்ட்! தென்னிந்தியாவில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றங்கள்!!

அதிர்ச்சி ரிப்போர்ட்! தென்னிந்தியாவில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றங்கள்!!
X

தென்னிந்தியாவில் அடுத்த 30 ஆண்டுகளில் கனமழையும், அடிக்கடி மழைப் பொழிவும் இருக்கும் என புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தென் மாநிலங்களுக்கான வரலாற்று காலநிலை மற்றும் காலநிலை மாற்ற கணிப்புகள் என்ற தலைப்பிலான ஆய்வு ஒன்றை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் 1991 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலகட்டத்தின் காலநிலை முறைகளை (Patterns) ஆய்வு செய்து தென்னிந்தியாவில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் கணிப்புகளை உருவாக்கி உள்ளனர்.

அதில், கடந்த மூன்று தசாப்தங்களில் (1991-2019) வெப்பநிலை மற்றும் மழையளவு அதிகரித்துள்ளது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் மழைப்பொழிவில் அதிக மாறுபாட்டைக் காண்கிறோம்.

rain

காலநிலை கணிப்புகள் (2021-2050) கோடை மற்றும் குளிர்கால குறைந்தபட்ச வெப்பநிலையின் அதிகரிப்பு, மழை நாட்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு (2.5 மிமீக்கு கூடுதலான மழை/நாள்) மற்றும் தென் மாநிலங்களின், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிக மழை நிகழ்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.

கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 0.5°C முதல் 1.5°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களில் குளிர்கால குறைந்தபட்ச வெப்பநிலை 1°C முதல் 2°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழையின் போது, ​​காரீஃப் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) மற்றும் ராபி (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பருவங்களில் மழைப்பொழிவு 2030-களில் தென்னிந்தியா முழுவதும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it