Theme Check

அதிர்ச்சி.. மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கொரோனாவுக்கு பலி !!

அதிர்ச்சி.. மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கொரோனாவுக்கு பலி !!

அதிர்ச்சி.. மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கொரோனாவுக்கு பலி !!
X

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரா தோமர் (89). உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் சந்திரா தோமர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மிகத்தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உத்தரபிரதேசம் மாநிலமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அங்கு ஏராளமாளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரா தோமர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

சந்திரா தோமர் 60 வயதுக்கு பிறகு தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றார். மூத்தோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார். அப்போதே அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை குவித்தனர்.

இந்தநிலையில், அவரது மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரபல நடிகை டாப்ஸி அவருடன் இருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சந்திரா தோமர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it