Theme Check

அதிர்ச்சி.. தாயை கொலைசெய்து வளர்ப்பு நாயுடன் சேர்ந்து உடலை சாப்பிட்ட மகன் !

அதிர்ச்சி.. தாயை கொலைசெய்து வளர்ப்பு நாயுடன் சேர்ந்து உடலை சாப்பிட்ட மகன் !

அதிர்ச்சி.. தாயை கொலைசெய்து வளர்ப்பு நாயுடன் சேர்ந்து உடலை சாப்பிட்ட மகன் !
X

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் தனது தாயை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். 15 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா சோலேடாட் கோமெஸ்(66) என்ற கடந்த 2019ஆம் ஆண்டு மகனால் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலேயே மகனால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அப்பெண்ணின் நண்பர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதனையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவரது மகன் ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் தனது வளர்ப்பு நாயுடன் இருந்துள்ளார். அவரை சுற்றிவளைத்துபிடித்த போலீசார் தாயார் குறித்து கேட்டுள்ளனர். அப்போது, தனது தயார் மரியா இங்கேதான் இருக்கிறார்.. ஆனால் தற்போது அவர் உயிருடன் இல்லை. அவர் இறந்துவிட்டார். நானும் என் வளர்ப்பு நாயும் அவரது உடலை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டோம் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் ஆல்பர்டோவை பிடித்து விலங்கு மாட்டினார். பின்னர் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்தப்போது பெட்ரூமில் மரியாவின் உடல் துண்டுதுண்டுகளாக இருந்துள்ளது. அந்த அறை முழுவதும் மரியாவின் உடல் பாகங்களாக கிடந்துள்ளது. அவற்றில் சிலவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைத்துள்ளார். மேலும் ஃபிரிட்ஜிலும் சில உடல் பாகங்களும் இருந்துள்ளது .

அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, மரியாவுக்கும் அவரது மகன் அல்பர்டோவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளித்து இருவரையும் சமாதானம் செய்துவைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டு வாக்குவாதம் முற்றியதால் அவரை கழுத்து நெறித்துக் கொலை செய்து உடலை கொஞ்சம் சாப்பிட்டேன் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் என் அம்மாவை கொலை செய்யும் படி பல குரல்கள் தொலைக்காட்சி வாயிலாக என்னிடம் சொல்லியது, அவை நண்பர்கள், பிரபலங்கள், பக்கத்துவீட்டுக்காரர்களின் குரல்களாக இருந்தது. தாயை தாக்கியதும் அவரை கொலை செய்ததும், அந்த உடலை உட்கொண்டதும் தனக்கு நினைவில் இல்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

ஆல்பர்டோ போதை பழக்கத்துக்கு அடிமையாகி அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மனநலம் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதற்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆல்பர்டோவுக்கு 15 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it