தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி.. கமல் கட்சி வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு !!
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி.. கமல் கட்சி வேட்பாளர் எடுத்த விபரீத முடிவு !!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் திமுக பெரும் வெற்றியை குவித்தது. அதிமுக குறிப்பிட்ட வெற்றியை பெற்றது. ஆனால், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உட்பட ஒருசில கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மக்கள் நீதிமய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் 36ஆவது வார்டில் மணி என்பவர் போட்டியிட்டார். இவர் கடன் வாங்கி தேர்தல் செலவுக்காக கூறப்படுகிறது. அதாவது, 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்த நிலையில் வெறும் தேர்தலில் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டையும் இழந்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மணி மிகவும் மனமுடைந்து மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மணி தற்போது தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in

