அதிர்ச்சி சம்பவம்.. 100 தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொலை !!
அதிர்ச்சி சம்பவம்.. 100 தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொலை !!

விஷ ஊசி செலுத்தி 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொல்லப்பட்டதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டுள்ளதாக விலங்குகள் உரிமை ஆர்வலர் அதுலாபுரம் கவுதம் புகார் தெரிவித்துள்ளார்.
அதிலும் அங்குள்ள திகுல் என்ற கிராமத்தில் நாய்கள் அதிகளவில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். குறிப்பாக கிராம பஞ்சாயத்து நிர்வாகம், நாய் பிடிப்பவர்களை வேலைக்கு அமர்த்தி மார்ச் 27 அன்று தெரு நாய்களுக்கு விஷம் ஊசி செலுத்தி கொன்று குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுடைய நாய் இறந்தைப் பற்றி சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியான வீடியோவில், கிராமத்தில் உள்ள கிணற்றில் நாய்களின் சடலங்கள் குவியலாக கிடப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்த சித்திபேட்டை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ள அதுலாபுரம் கவுதம், உரிய விசாரணை நடத்தி குற்றம்புரிந்தவர்கள் மீது வழங்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
100 community and pet dogs were killed by the village sarpanch in Village Thigul, Jagadevpur Mandal,Telangana. pic.twitter.com/D41tgt9bu8
— People For Animals India (@pfaindia) March 28, 2022
newstm.in

