Theme Check

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!! அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்..!

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!! அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்..!

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!! அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்..!
X

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரத்தில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் திடீரென நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.

Andhra

இதனால் அங்கு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கிருந்து வெளியேறி ஓடி வந்தபோது அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதுள்ளது.

இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Andhra

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 140 பெண்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாயுக்கசிவுக்கான காரணம் தெரியவில்லை எனவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it