அதிர்ச்சி தகவல்..!! சிக்குன்குனியா பரப்பக்கூடிய கொசு தான் இந்த புதிய வைரசையும் பரப்புகின்றன..!!

அதிர்ச்சி தகவல்..!! சிக்குன்குனியா பரப்பக்கூடிய கொசு தான் இந்த புதிய வைரசையும் பரப்புகின்றன..!!

அதிர்ச்சி தகவல்..!! சிக்குன்குனியா பரப்பக்கூடிய கொசு தான் இந்த புதிய வைரசையும் பரப்புகின்றன..!!
X

கேரள மாநிலத்தில் முதல் முறையாக, பாறசாலை என்ற இடத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 14 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரிகள் ஆய்வு நிலையத்திற்கு மாநில சுகாதாரத்துறை அனுப்பி வைத்திருந்தது.

இந்நிலையில், கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜிகா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஜிகா வைரஸ் என்பது மழைக் காலங்களில் பரவும் ஒரு வகை காய்ச்சல் போன்றதுதான். இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்களே. டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள்தான் ஜிகா வைரசையும் பரப்புகின்றன.

பொதுவாக, ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவும் என்பதால் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சாதாரண காய்ச்சலுக்கு உள்ளதைப் போன்றே தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. ஆனால், தமிழக எல்லைப் பகுதியை ஒட்டிய கேரளாவில் ஜிகா வைரஸ் புகுந்து விட்டதால் தமிழகமும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

Tags:
Next Story
Share it