Theme Check

அதிர்ச்சி தகவல் அம்பலம்.. 54 அரசுப் பள்ளிகளில் தமிழ் இல்லையாம்..!

அதிர்ச்சி தகவல் அம்பலம்.. 54 அரசுப் பள்ளிகளில் தமிழ் இல்லையாம்..!

அதிர்ச்சி தகவல் அம்பலம்.. 54 அரசுப் பள்ளிகளில் தமிழ் இல்லையாம்..!
X

தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு, ‘54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக கொண்டு செயல்படுகிறது.

இந்த பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. இந்த பள்ளிகள் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவை’ என குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “தமிழ் மொழி, பயிற்று மொழியாக இல்லை எனக் கூறி விட முடியாது; 54 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியா..? என விசாரிக்கப்படும்” என்றார்.

Next Story
Share it