அதிர்ச்சி வீடியோ! மனைவியுடன் கால்வாயில் விழுந்த காவலர்!!
அதிர்ச்சி வீடியோ! மனைவியுடன் கால்வாயில் விழுந்த காவலர்!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் காவலரும், அவரது மனைவியும் இருசக்கர வாகனத்துடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அங்கு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தயானந்த் சிங் என்ற காவலர் மற்றும் அவரது மனைவி ராம்காட் மருத்துவரை பார்க்க சென்றனர்.
அலிகாரில் உள்ள மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தான் இந்த விபரீதம் ஏற்பட்டது. சாலை முழுவதும் மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது.

சாலை தான் இருக்கிறது என்று நம்பி காவலர் தயானந்த் சிங் வாகனத்தை இயக்கியபோது, மழைநீர் மூடிய கழிவுநீர் கால்வாயில் வாகனத்துடன் காவலரும், அவரது மனைவியும் விழுந்தனர்.
இருவரும் கால்வாயில் விழுந்ததை அருகில் இருந்த சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகே ஓடிவந்த அவர்கள் காவலர் மற்றும் அவரது மனைவி இருவரையும் உடனடியாக மீட்டதால் இருவரும் உயிர்தப்பினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Visuals from UP's Aligarh.
— Piyush Rai (@Benarasiyaa) June 18, 2022
Leaving this here. pic.twitter.com/bOhACL96IW
newstm.in

