Theme Check

அரிவாள் வெட்டில் முடிந்த செருப்பு பிரச்னை!!

அரிவாள் வெட்டில் முடிந்த செருப்பு பிரச்னை!!

அரிவாள் வெட்டில் முடிந்த செருப்பு பிரச்னை!!
X

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் செருப்பு கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபைசு என்பவர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே காலணிகள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். இந்நிலையில் லோகேஷ் என்பவர் ஃபைசு கடையில் 1,500 ரூபாய் மதிப்பிலான காலணி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மீண்டும் கடைக்கு வந்த லோகேஷ் அந்த காலனியை வேண்டாமென கூறி அதற்கான தொகையை திரும்ப கேட்டதாகவும் ஆனால் கடை உரிமையாளர் பைசு வேறு காலணி மாற்றித் தருவதாகவும் பணத்தை திரும்ப தர இயலாது என்றும் கூறியுள்ளார்.

ksg

இதனால் பைசு மற்றும் லோகேஷ் இடையே ஏற்பட்ட தகராறில் லோகேஷை பைசு நண்பர்கள் தாக்கியதால், லோகேஷ் காயமடந்தார். பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பைசு கடையை திறக்க வரும்போது திடீரென லோகேஷ் கையில் அரிவாளுடன் பைசுவை வெட்ட துரத்தியுள்ளார். அப்பொழுது லோகேஷிடம் இருந்து தப்பிப்பதற்காக பைசு சாலையில் ஓடியுள்ளார். துரத்திச் சென்ற லோகேஷ் தோள்பட்டை கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ksg

படுகாயம் அடைந்த பைசுவை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு லோகேஷை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it