Theme Check

பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீச்சு.. மோதலால் பரபரப்பு !

பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீச்சு.. மோதலால் பரபரப்பு !

பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீச்சு.. மோதலால் பரபரப்பு !
X

பொள்ளாச்சி அருகே குளத்தை பார்வையிடச் சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச்சு. இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோதவாடி கிராமத்தில் உள்ள குளம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளம் நிரம்பியதை கொண்டாடும் விதமாக குளக்கரையில் கிராம பொதுமக்கள் பொங்கல் விழா நடத்தினர்.

pollachi jayaraman

இதில், பங்கேற்பதற்காக முன்னாள் சட்டபேரவை துணை சபாநாயகரும் தற்போதைய பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை வந்திருந்தார். நாங்கள் தான் குளம் நிறைய காரணம் என அதிமுக தரப்பினர் கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த திமுகவினர் பல ஆண்டுகளாக குளத்தை கவனிக்காத சட்டமன்ற உறுப்பினர் இப்போது வந்தது எதற்காக என கேள்வி எழுப்பினர்.

மேலும், விழாவில் அவர் பங்கேற்க கூடாது என திமுகவினர் முழக்கம் எழுப்பி அவர் வெளியேற கோரினர். இதனால் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே சிறிது மோதல் உண்டான நிலையில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

pollachi jayaraman

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் காலணிகளை வீசினர். திடீரென ஜெயராமனை நோக்கிசெருப்பு வீசப்பட்டதால்மீண்டும் பதட்டமான சூழ்நிலை உருவானது. ஆனால், அது அவர் மீது படவில்லை. இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமனை, அங்கிருந்து கட்சியினரும் போலீசாரும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

Next Story
Share it