தந்தை மகனுக்கு தரும் பரிசுக்கு வரி கட்ட வேண்டுமா? கிஃப்ட் பாக்ஸ் சட்டம் என்ன சொல்கிறது..?
தந்தை மகனுக்கு தரும் பரிசுக்கு வரி கட்ட வேண்டுமா? கிஃப்ட் பாக்ஸ் சட்டம் என்ன சொல்கிறது..?

இந்தியாவில் பரிசுகளை பரிமாறிக்கொள்ளாமல் எந்த விழாவும் முழுமை அடையாது. உங்களுக்கு கொடுக்கப்படும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
உங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு மதிப்பின் தொகை ரூ. 50 ஆயிரத்தை கடந்தால், அதற்கு நீங்கள் வரி செலுத்துவது கட்டாயம். பொருளின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்தை கடந்துவிட்டாலும், பரிசு பெறப்பட்ட மொத்த தொகைக்கும் வரி விதிக்கப்படும்.பரிசுக்கான வரி வதிப்பு என்பது ஓராண்டு முழுவதும் ஒரு நபர் பெறப்பட்ட பரிசின் மொத்த மதிப்பின் அடிப்படையில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் உறவினர்கள் மூலம் வழங்கப்படும் பரிசுகளுக்கு வருமான வரிச் சட்டப் 56-ன் பிரிவின் படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

அதன்படி உறவினர் – மனைவி, சகோதரர் அல்லது சகோதரி, மனைவியின் சகோதரர் அல்லது சகோதரி, பெற்றோரில் ஒருவரின் சகோதரர் அல்லது சகோதரி உள்ளிட்ட ரத்தச் சொந்தங்கள் வழங்கும் பரிசுகளுக்கு இந்த விதி பொருந்தும்.
ஆனால் நண்பர்கள் உறவினர்களுக்கு கீழ் வரமாட்டார்கள். அவர்களிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் பரிசு கிடைக்கப்பெற்றால் அதற்கு வரி உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் திருமணத்தின் போது பெறப்பட்ட பரிசுகளுக்கு வரிவிலக்கு உண்டு.
ஒரு நபருடைய பிறந்தநாள், திருமண விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு வழங்கப்படும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. அதேபோல, மரணத்தை கருத்தில் கொண்டு பெறப்பட்ட பரிசு பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஒரு வீட்டை சித்தப்பா அல்லது ரத்த உறவுகள் நேரடியாக உங்களுக்கு பரிசளித்தால் அது அன்பளிப்பாகாது. அப்போது உங்கள் அப்பா பெயருக்கு வீட்டை மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு, அதற்கு பிறகு அவரிடமிருந்து நீங்கள் அந்த வீட்டை வாங்கிக்கொள்ளலா,ம்.

