இரவில் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்ற எஸ்.ஐ.. காலையில் மகன்கள் பேரதிர்ச்சி !!

இரவில் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்ற எஸ்.ஐ.. காலையில் மகன்கள் பேரதிர்ச்சி !!

இரவில் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்ற எஸ்.ஐ.. காலையில் மகன்கள் பேரதிர்ச்சி !!
X

போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் பாலாஜி (50) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சசிரேகா என்ற மனைவியும், தமிழ்செல்வன், பிரபு என்ற மகன்களும் உள்ளனர். பாலாஜி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்றுமுன்தினம் காலை பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் தனது அறைக்கு உறங்கச்சென்றார். ஆனால் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

எப்போதும் அதிகாலையிலேயே அறையில் இருந்து வெளியே வரும் தந்தை நீண்டநேரமாக கதவை திறக்கவில்லை என்பதை அறிந்து, சந்தேகமடைந்த மகன்கள் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் கதவை உடைத்தனர். அப்போது பாலாஜி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன்கள் கதறிஅழுதனர். உடனே சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாலாஜி சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் குடும்பத்தினருடன் பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர் சைதாப்பேட்டை போலீசார்.

newstm.in


Tags:
Next Story
Share it