Theme Check

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் முற்றுகை! விவசாயிகளின் அதிர்ச்சி போராட்ட திட்டம்!

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் முற்றுகை! விவசாயிகளின் அதிர்ச்சி போராட்ட திட்டம்!

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் முற்றுகை! விவசாயிகளின் அதிர்ச்சி போராட்ட திட்டம்!
X

விவசாயிகளின் போராட்ட யுக்தி நாளுக்கு நாள் தடம் மாறிக் கொண்டே செல்கிறது. விவசாயிகள், தங்களது போராட்டத்தின் அடுத்த நகர்வாக, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் பிப்ரவரி 6ம் தேதி, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி எல்லையில் கூடியுள்ள ஹரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 நாட்களுக்கும் மேலாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசு அவர்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. எனினும், சுமூகமான முடிவும் எதுவும் எட்டப்படவில்லை.

மத்திய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறுகட்ட போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதனால் சில விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் இருந்து விலகினர்.

தற்போது இந்த வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை விவசாய சங்க தலைவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது விவசாயிகளை மேலும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் தங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

அதன்படி, விவசாயிகள் தரப்பில் நேற்று வெளியான தகவலின் படி வரும் 6-ம் தேதி, பிற்பகல் நேரத்தில் நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். சுமார் 3 மணிநேரம் இந்த போராட்டம் நடைபெறும் எனவும், அதற்கு ‘சக்கா ஜாம்’என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Tags:
Next Story
Share it