Theme Check

வெள்ளி வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..!

வெள்ளி வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..!

வெள்ளி வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..!
X

டோக்கியோவில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில், மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.

இதன்மூலம், ஒலிம்பிக் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார். இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது. ஒருவேளை அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
Tags:
Next Story
Share it