பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ள சிம்பு படம் ..!!

பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ள சிம்பு படம் ..!!

பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ள சிம்பு படம் ..!!
X

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து, சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 3-வது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள். இதனிடையே, இன்று திருச்செந்தூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, படத்தின் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்று பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ளது படக்குழு.


திருச்செந்தூரில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

Tags:
Next Story
Share it