Theme Check

அதிமுகவில் ஒற்றை தலைமை.. யாருக்கு ஆதரவு அதிகம் தெரியுமா..?

அதிமுகவில் ஒற்றை தலைமை.. யாருக்கு ஆதரவு அதிகம் தெரியுமா..?

அதிமுகவில் ஒற்றை தலைமை.. யாருக்கு ஆதரவு அதிகம் தெரியுமா..?
X

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதி ஆலோசனை நடைபெற்றது.

இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ள நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் குவிந்துள்ளனர். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் வந்த முன்னாள் பெரம்பூர் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாய் பகுதியில் தாக்கியதால் சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

Next Story
Share it