Theme Check

அக்கா, அவரது ஒரு வயது மகனுக்கு அரிவாள் வெட்டு.. தம்பி தலைமறைவு !!

அக்கா, அவரது ஒரு வயது மகனுக்கு அரிவாள் வெட்டு.. தம்பி தலைமறைவு !!

அக்கா, அவரது ஒரு வயது மகனுக்கு அரிவாள் வெட்டு.. தம்பி தலைமறைவு !!
X

அக்கா மற்றும் அவரது ஒரு வயது மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி தம்பியே கொலை செய்த சம்பவம் வாழவந்தான் கோட்டையில் பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் டைசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில காலம் ஒன்றாக வாழ்ந்த இருவரும், அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தனலெட்சுமி தாய் வீட்டின் அருகிலேயே தனது ஒரு வயது மகன் சாய் தேவ்வோடு வசித்து வருகிறார். அவரது தம்பி தனகோடி (22) என்பவர் மாடியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப சண்டை காரணமாக தனக்கோடி தன்னுடைய அக்கா தனலெட்சுமி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

police

இதனால் ஆத்திரம் அடைந்த தனகோடி, தனது சகோதரி தனலெட்சுமி மற்றும் அவரது ஒரு வயது மகன் சாய்தேவ் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் உயிருக்கு போராடிய தனலட்சுமி மற்றும் சாய்தேவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தனலட்சுமியும், சாய் தேவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் தப்பியோடிய தனக்கோடியை தேடி வருகின்றனர்.

இதனிடையே, தனக்கோடி கைது செய்த பிறகுதான் தனலெட்சுமியை வெட்டி கொலை செய்ய முயன்றதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it