Theme Check

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமார பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது நோயின் பாதிப்பு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் உயிரிழப்புகளும் அதிகம் உள்ளன.

2ஆவது அலை பரவலில், சாமான்யன் முதல் முக்கிய பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினரும் வெகு சாதாரணமாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறைசார்ந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது மூத்த மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடன் துணை நின்ற அனைவருக்கும், தனது மகனுக்கு சிசிக்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ முன்களப்பணியார்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றிவந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Tags:
Next Story
Share it