Theme Check

தனி செயலியில் ஐபிஎல் போட்டி.. சிக்கினார் சிவகங்கை இளைஞர்..!

தனி செயலியில் ஐபிஎல் போட்டி.. சிக்கினார் சிவகங்கை இளைஞர்..!

தனி செயலியில் ஐபிஎல் போட்டி.. சிக்கினார் சிவகங்கை இளைஞர்..!
X

ஐபிஎல் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தனியார் டிவி நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பு செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (29) என்பவர் அனுமதி பெறாமல் தனி செயலி மூலம் ஒளிபரப்பியுள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கடாரம் துப்பா (36) என்பவர் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனடிப்படையில் ஹைதராபாத் சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் தலைமையில் சுனில், திருமாவேலன், குபேந்தர், மணிகண்டா ஆகிய போலீசார் சிவகங்கை வந்து ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகங்கை ஜே எம்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஹைதராபாத் கூட்டிச் சென்றனர்.

Next Story
Share it