மழையால் தவிக்கும் ஆதரவற்ற மக்கள்.. தேடிச்சென்று உணவு வழங்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் !

மழையால் தவிக்கும் ஆதரவற்ற மக்கள்.. தேடிச்சென்று உணவு வழங்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் !

மழையால் தவிக்கும் ஆதரவற்ற மக்கள்.. தேடிச்சென்று உணவு வழங்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் !
X

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினர் உணவு வழங்கி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி இரவு பெரும் மழை கொட்டி சென்னை தத்தளித்தது. அதன்பிறகு மழை குறைந்தாலும் நிற்கவில்லை. இதனால் மற்ற மாவட்டங்களை விடவும் தலைநகர் சென்னை அதிகம் பாதிப்படைந்துள்ளது.

sivakathikeyan

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் நீர் புகுந்து பல இடங்களில் வசிக்கும் மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் களத்துக்கே நேரில் சென்று ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் தன்னார்வலர்களும் பேருதவி செய்துவருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினரும் களத்தில் குதித்துள்ளனர். வெள்ளத்தால் சாலைகளில்கூட தங்க இடமின்றி தவித்துவரும் மக்களுக்கு தேடிச்சென்று உணவு அளித்து வருகின்றனர்.
sivakathikeyan

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உணவு தயார் செய்து பார்சல் மூலம் தேவைப்படும் மக்களுக்கு அளித்து வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it