நெல்சன் இயக்கும் விஜய் படத்தில் சிவாகார்த்திகேயன்..?

நெல்சன் இயக்கும் விஜய் படத்தில் சிவாகார்த்திகேயன்..?

நெல்சன் இயக்கும் விஜய் படத்தில் சிவாகார்த்திகேயன்..?
X

விஜய் நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயனிடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பொங்கல் பண்டிக்கைக்கு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி மாஸான ஒரு கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

தற்போது நடிகர் விஜய் ‘தளபதி 65’ படத்தில் தீவிரம் காட்டி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை, கோலமாவு கோகிலா மற்றும் மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் தீலிப்குமார் இயக்கி வருகிறார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கவைத்தார். அதேபோல, நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் ‘தளபதி 65’ படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தளபதி 65 படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக தயாராகவுள்ளது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது மற்ற நடிகையர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவிலேயே இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது தொடர்பான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:
Next Story
Share it