Theme Check

ரூ.25 கோடி கிளப்பில் இணைந்தார் சிவகார்த்திகேயன்..!

ரூ.25 கோடி கிளப்பில் இணைந்தார் சிவகார்த்திகேயன்..!

ரூ.25 கோடி கிளப்பில் இணைந்தார் சிவகார்த்திகேயன்..!
X

சமீபகாலமாக, தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதும், தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதும் அதிகரித்து வருகிறது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ராம் சரணை இயக்குகிறார். லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் போதினேனியை வைத்து படம் இயக்கி வருகிறார். தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கவிருக்கிறார். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

அந்த வரிசையில், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தற்போது, புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் நடிப்பதோடு, லைகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார்.

இந்நிலையில், ‘ஜதி ரத்னாலு’ எனும் சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. அனுதீப் சொன்ன கதை பிடித்துப் போகவே, ஒப்புக்கொண்டாராம் சிவகார்த்திகேயன்.

அனுதீப் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். அவர் ஒரு படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது இதுவே முதல் முறை ஆகும். சிவகார்த்திகேயன் ரூ.25 கோடி கிளப்பில் சேர்வது குறித்து அறிந்த ரசிகர்கள் அது பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Tags:
Next Story
Share it