சன் டிவியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ??
சன் டிவியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ??

கோலாமாவு கோகிலா படம் மூலம் சினிமாவில் கால்பதித்த இயக்குநர் நெல்சன், அடுத்ததாக மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான ‘கேங்க்ஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரியங்கா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகவும், அதையடுத்து தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

