Theme Check

சிவகாசி சிறுமி பிரித்திகா கொலை! 6 பேரிடம் விசாரணை!

சிவகாசி சிறுமி பிரித்திகா கொலை! 6 பேரிடம் விசாரணை!

சிவகாசி சிறுமி பிரித்திகா கொலை! 6 பேரிடம் விசாரணை!
X

சிவகாசி அருகே, கொங்கலாபுரம் கிராமத்தில் 8 வயது சிறுமி பிரித்திகா கொலை செய்யப்பட்டது தொடர்பாக, 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி சிறுமி பிரித்திகா கொலை! 6 பேரிடம் விசாரணை!

விருதுநகர், சிவகாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுந்தரத்திற்கு சின்னமுத்து (11) என்கிற மகனும், பிரித்திகா (8) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். கணவன், மனைவி இருவரும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, சிறுமி பிரித்திகா, வீட்டின் பின்புறம் உள்ள பொது கழிப்பிடத்துக்கு செல்வதாக கூறி சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இரவு வரையில் சிறுமியைக் காணாததால், சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார்.

சிவகாசி சிறுமி பிரித்திகா கொலை! 6 பேரிடம் விசாரணை!

இந்நிலையில் நேற்று காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில் சிறுமி பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. சிறுமி பிரித்திகாவை யாரோ மர்ம ஆசாமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து சம்பவ இடத்தில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், போலீசார் இதுவரையில் அசாம் வாலிபர்கள் மூவர் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it