Theme Check

சிவகாசி ஜெயலட்சுமி திருச்சியில் தர்ணா..!

சிவகாசி ஜெயலட்சுமி திருச்சியில் தர்ணா..!

சிவகாசி ஜெயலட்சுமி திருச்சியில் தர்ணா..!
X

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனம் எல்பின். இந்த நிறுவனம், முதலீடு செய்யும் ஒவ்வொருவருக்கும் இரண்டு மடங்காக பணத்தைத் திருப்பித் தருவதாக கொடுத்த விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

தற்போது, பொதுமக்கள் முதலீடு செய்த பலகோடி ரூபாயை திருப்பித் தராமல் எல்பின் நிறுவனம் ஏமாற்றியுள்ளதாகவும், பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாகவும், பலருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவில் நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் குவிந்தன.

அந்த வகையில், சிவகாசியைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயலட்சுமி, எல்பின் நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்வரை முதலீடு செய்துள்ளார். ஆனால், இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி எல்பின் நிறுவன வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமியிடம் கண்டோன்மென்ட் காவல்துறையினர் பலமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணத்தைத் திருப்பித் தரும்வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து போலீஸார், “பணத்தைப் பெற்றுத்தர புகார் கொடுங்கள்; நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறி சிவகாசி ஜெயலட்சுமியை அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:
Next Story
Share it