ஆறு பேர் விடுதலை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !!
ஆறு பேர் விடுதலை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தீர்ப்பை வரவேற்றனர். பேரறிவாளன் விடுதலையை கொண்டாடினர்.
எனினும் பேரறிவாளனுடன் சிறையில் இருந்த மற்ற 6 பேர் தற்போதும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலை குறித்த கேள்வி இப்போது எழுந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை நாளிலேயே, மற்ற 6 பேரையும் விடுதலைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21/05/2022) ஆலோசனை நடத்தினார். நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

