Theme Check

சிக்ஸர் மழை.. இந்தியா - இங்கிலாந்து வீரர்கள் இணைந்து புதிய சாதனை !

சிக்ஸர் மழை.. இந்தியா - இங்கிலாந்து வீரர்கள் இணைந்து புதிய சாதனை !

சிக்ஸர் மழை.. இந்தியா - இங்கிலாந்து வீரர்கள் இணைந்து புதிய சாதனை !
X

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை இழந்தது. இதனையடுத்து ஒருநாள் போட்டித் தொடர் யாருக்கும் என்பதை நிர்ணயிக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையாக அமைந்துள்ளது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர். இத்தொடரில் மொத்தமாக 70 சிக்ஸர்கள் பறந்துள்ளன. இதில், இந்திய அணி வீரர்கள் 33 சிக்ஸர்களும், இங்கிலாந்து அணி வீரர்கள் 37 சிக்ஸர்களும் விளாசி உள்ளனர். அதாவது இருநாட்டு வீரர்களும் சேர்ந்து 70 சிக்ஸர்களை விளாசி உள்ளனர்.

இதற்கு முன்னதாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் அதிகபட்சமாக 57 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு சாதனையாக இருந்தது. தற்போது இந்தியா - இங்கிலாந்து தொடரில் 70 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் கடந்த 2017 இல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடர் உள்ளது. அந்த தொடரில் 56 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 37 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் ரிஷப் பண்ட் 78 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும் கடைக்கட்டத்தில் ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் இந்தியா 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 322 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. டேவிட் மாலன் அரை சதம் அடித்து அவுட்டானார். எனினும் நங்கூரம் போல் நிலைத்துநின்று விளையாடிய சாம் கரன் வெற்றிக்காக கடுமையாக போராடினார். அவர் 95 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினர். புவனேஷ்வர் குமார் 48வது ஓவரில் 4 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 49வது ஓவரில் 5 ரன்னும், நடராஜன் இறுதி ஓவரில் 6 ரன்னும் விட்டுக் கொடுத்தனர்.

இந்நிலையில், ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று தனி மனிதனாக போராடிய சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 3 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் என மொத்தம் 219 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருது வென்றார்.

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it