எடப்பாடியின் ஸ்கெட்ச்!! சிக்கினால் திமுக காலி!
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கேபிபி சாமி, குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன் ஆகியோர் இறந்ததை அடுத்து, அந்த இரண்டு தொகுதிகளும் காலி என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும் தொகுதிகள் காலியான தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. ஆனால் காலியான கொகுதிகளுக்கான தேர்தலை ஆறு மாதங்களில் நடத்த வேண்டும் என்பது விதி. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இடைத்தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போதும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு உதாரணம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களை சொல்லலாம். இந்நிலையில் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் மாஸ் காட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளை அதிமுக வென்றுவிட்டால் அது 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுக்கு பெரும் பலமாக இருக்கும்.
இரண்டு தொகுதிகளிலும் திமுக களம் இறங்கியே ஆக வேண்டிய கட்டாயம். ஏனென்றால் இரண்டு தொகுதிகளில் இறந்தவர்கள் திமுக எம்எல்ஏக்கள். அதனால் தனது செல்வாக்கை திமுக நிரூபித்தே ஆக வேண்டும். அதனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் தான் அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
newstm.in