சற்று ஆறுதல்.. ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து !!
சற்று ஆறுதல்.. ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து !!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்துதான் வருகிறது.
தற்போது தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்தின் விலையை மருந்து கம்பெனிகள் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பல்வேறு மருந்து நிறுவனங்கள், ரெம்டெசிவிரின் விலையை கணிசமாக குறைத்துள்ளன என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் எல்.மான்டவியா டுவிட்டரில் தெரிவித்திருந்தார். கடிலா ஹெல்த்கேர் நிறுவனம், டாக்டர் ரெடீஸ் லேப் நிறுவனம், சிப்லா, மைலன், சைன்ஜின் இன்டர்நேஷனல், ஹீட்டரோ ஹெல்த்கேர் ஆகிய மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்தன.

இந்நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

